முன்னாள் அதிபர் டிரம்புக்கு எதிராக பிரசாரம் செய்ய ரூ.417 கோடி: அதிபர் பைடனின் தேர்தல் குழு ஒதுக்கீடு

வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் நான்கரை மாதங்கள் உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இதேபோன்று ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பைடன் மீண்டும் தேர்தலில் களமிறங்கியுள்ளார். இருவருக்கும் வருகிற 27ம் தேதி நேருக்கு நேர் விவாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த விவாதத்துக்கு முன்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான விளம்பர பிரசாரத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கு ஜனநாயக கட்சி திட்டமிட்டுள்ளது.

இதற்காக அதிபர் பைடனின் தேர்தல் குழுவானது 50மில்லியன் டாலரை (ரூ.417கோடி) விளம்பர பிரசாரத்துக்காக ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலமாக டிரம்ப்புக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள், வழக்குகளில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை, பாலியல் வன்கொடுமை மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டது என அனைத்தும் அமெரிக்காவின் அனைத்து மக்களிடமும் சென்றடையும் வகையில் தொலைக்காட்சிகள், செல்போன்கள், தேசிய கேபிள் மற்றும் ஸ்ட்ரீமிங் சாதனங்கள் மூலமாக விளம்பரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

The post முன்னாள் அதிபர் டிரம்புக்கு எதிராக பிரசாரம் செய்ய ரூ.417 கோடி: அதிபர் பைடனின் தேர்தல் குழு ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: