சீர்காழி மீன், இறைச்சி மார்க்கெட்டில் அகற்றப்படாத கழிவுகளால் சுகாதாரகேடு: உடனே அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

சீர்காழி: சீர்காழி மீன், இறைச்சி மார்க்கெட்டில் கழிவுகள் அகற்றப்படாததால் சுகாதாகேடு ஏற்றப்பட்டுள்ளது. எனவே உடனே அவற்றை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியிலில் நகராட்சிக்கு சொந்தமான மீன் மற்றும் இறைச்சி விற்பனை மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 40க்கும் மேற்பட்ட மீன் மற்றும் ஆடு, கோழி இறைச்சி விற்பனை கடைகள் இயங்கி வருகிறது. சீர்காழி மட்டுமின்றி சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமமக்களும் காலை முதல் மாலை வரை இங்கு வந்தே மீன் மற்றும் இறைச்சி வாங்கி செல்வது வழக்கம்.

இங்கு ஒதுங்கும் கழிவுகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் அங்காடி ஒப்பந்ததாரர்கள் தினமும் அகற்றி தூய்மைப்படுத்தி கிருமி நாசினி தெளிப்பது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அங்காடியில் மீன் மற்றும் இறைச்சி கழிவுகள் அகற்றபடாமல் ஆங்காங்கே குவிந்து வைக்கபட்டுள்ளது. பல நாட்கள் கடந்ததால் தற்போது கழிவுகளில் புழுக்கள் தோன்றி கடும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேட்டால் மீன் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள கடை உரிமையாளர்கள் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றர்.

மீன்வாங்குவதற்காக மீன் மற்றும் இறச்சி மார்க்கெட்டுக்கு உள்ளே செல்லும் பொதுமக்கள் நோய்தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்துடனே, முகம் சுளித்தப்படி மூக்கை பிடித்துக் கொண்டு மீன்கள் வாங்கி செல்கின்றனர். மேலும் கழிவுகளில் இருந்து தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் நகராட்சி நிர்வாகம் உடனே கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: