மங்கலம்பேட்டை பகுதியில் நெல்லுக்கு பின் பயறு வகை பயிர் திட்டம்-வேளாண் இணை இயக்குநர் ஆய்வு

விருத்தாசலம் : தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரால் மண்வளத்தை பாதுகாத்திட, நெல்லுக்குப்பின் பயறுவகை பயிர்கள் சாகுபடி என்ற சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு தேவையான விதைகள் உற்பத்தி செய்திட செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு, கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிக்கு

தேவையான 1200 மெட்ரிக் டன் விதைகளை கொள்முதல் செய்ய விருத்தாசலம் வட்டாரத்தில் அனைத்து வட்டாரம் சார்பாக விதை பண்ணைகள் அக்டோபர் மாதத்தில் அமைக்கப்பட்டது.

தற்போது முதிர்ச்சி மற்றும் அறுவடை நிலையில் உள்ள வயல்களின் மூலம் 1200 மெட்ரிக் டன் கொள்முதல் செய்து, நெல் தரிசில் உளுந்து சாகுபடி மற்றும் நெல்லுக்குப்பின் உளுந்து சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானிய விலையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அவ்வாறு விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள எடச்சித்தூரில் அமைக்கப்பட்டுள்ள உளுந்து விதை பண்ணைகளை கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கண்ணையா ஆய்வு செய்தார். வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) பிரேம்சாந்தி, விருத்தாசலம் வட்டார உதவி இயக்குநர் விஜயகுமார், துணை வேளாண்மை அலுவலர் வெங்கடேசன் மற்றும் உதவி அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: