முன்னாள் போப் 16ம் பெனடிக்டின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

வாடிகன் சிட்டி: முன்னாள் போப்  16ம் பெனடிக்டின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த  வாடிகன் பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையை 8 ஆண்டுகள் வரை வழிநடத்திய போப்  16ம் பெனடிக்ட்(95) தனது பதவியைத் துறந்து வாடிகனில் ஓய்வெடுத்து வந்தார். அவரது உடல்நிலை கடந்தசில நாட்களாக கவலைக்கிடமாக இருப்பதாக  தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 31ம் தேதி 16ம் பெனடிக்ட் காலமானார்.

இந்நிலையில் முன்னாள்  போப்பின் உடல் நேற்று காலை 9 மணிக்கு வாடிகன், புனித பீட்டர் பேராலயத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் அங்கு வந்து  16ம் பெனடிக்டுக்கு அஞ்சலி செலுத்தினர். 5ம் தேதி காலையில் உடல் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் அடக்கம் செய்யப்படும். இதில் தற்போதைய போப்  பிரான்சிஸ் கலந்து கொள்வார்  என கூறப்பட்டுள்ளது.

Related Stories: