திருப்பூர் சுபஸ்ரீயின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம்: ஈஷா யோகா மையத்தில் மர்ம மரணங்கள் தொடர்வதால் விசாரணை நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

கோவை: கோவையில் யோகா பயிற்சிக்கு பின் காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தக்கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுபஸ்ரீ கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு சென்ற பின்னர் காணாமல் போன நிலையில் 10 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுபஸ்ரீ மரணத்துக்கு நீதி கேட்டு கோவையில் மாதர் சங்கம், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர். குடும்ப வழக்கத்திற்கு மாறாக சுபஸ்ரீயின் உடல் எரிக்கப்பட்டு இருப்பதாகவும், இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருப்பதாகவும் தெரிவித்த கோவை எம்.பி.நடராஜன் இதுகுறித்து விசாரணை நடத்த குழு அமைக்க வேண்டும் என்றார்.

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு சென்ற பெண் மாயமான திருப்பூரை சேர்ந்த சுபஸ்ரீ மர்மமான முறையில் இறந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இரவோடு இரவாக உடற்கூறாய்வு நடத்தப்பட்டத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்த அவர் சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், ஈஷா யோகா மையம் தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் மீது ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.   

Related Stories: