தூத்துக்குடியில் முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா வீட்டில் மர்மநபர்கள் தாக்குதல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில்  பாஜ மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்பியுமான சசிகலா புஷ்பா வீட்டில் மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் கார் கண்ணடிகள் நொறுங்கியதோடு, வீட்டு ஜன்னல்கள், பூந்தொட்டி, நாற்காலிகள் சேதமடைந்தன.

 கடந்த அதிமுக  ஆட்சியில் தூத்துக்குடி மேயராகவும், அதைத்தொடர்ந்து எம்பியாகவும் இருந்தவர்  சசிகலா புஷ்பா.

தற்போது இவர் பாஜவின் மாநில துணைத்தலைவராக உள்ளார். இவரது வீடு தூத்துக்குடி பி அண்ட் டி காலனியில் உள்ளது. இவரது வீட்டிற்கு நேற்று வந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் வீட்டுவாசலில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரின் கண்ணாடிகள் நொறுங்கின.  

வீட்டு ஜன்னல்கள், பூந்தொட்டி, நாற்காலிகள் ஆகியவற்றை உடைத்து  சேதப்படுத்தி சென்றனர்.இதுகுறித்து தெரியவந்ததும் பாஜ நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அங்கு  திரண்டனர். குமரியில் நடந்த பாஜ நிகழ்ச்சிக்கு சென்ற சசிகலா நேற்று பகலில்தான்  ஊர் திரும்பியது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: