விடுதலை ராஜேந்திரன், செ.திவான் உட்பட 8 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி ரூ.1 கோடி நூல் உரிமைத்தொகை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்..!!

சென்னை: விடுதலை ராஜேந்திரன், நெல்லை செ.திவான், நா.மம்மது உட்பட 8 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி உரிமைத்தொகை வழங்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நூல் உரிமைத் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மறைந்த நெல்லை கண்ணன், கந்தர்வன், சோமலே, விருதுநகர் ராசய்யா, தஞ்சை பிரகாஷ் நூல்களும் நாட்டுடைமையாக்கப்பட்டது. தமிழ் மொழி வளர்ச்சி, சமூக முன்னேற்றத்துக்கு பாடப்பட்டதற்காக 8 அறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி ரூ.1 கோடி நூல் உரிமைத் தொகையை முதலமைச்சர் வழங்கினார்.

Related Stories: