பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி சேலை உற்பத்தி தீவிரம்: ஈரோட்டில் இருந்து பல மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தொடக்கம்.

ஈரோடு: பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக ஈரோட்டில் உற்பத்தியான இலவச வேட்டிசேலைகள் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின்போது குடும்ப அட்டைதாரகள் விதவைகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்க பட்டு வருகிறது. இதற்காக ஈரோடு மாவட்டத்திற்க்கு 1.32 கோடிக்கான இலவச வேட்டி, சேலைகள் ஆடர்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு தொடக்க கூட்டுறவு  நெசவாளர் சங்கங்களில் சுமார் 15000 விசைத்தறிகள் முலம் 69,74,170 வேட்டிகளும் 62,39,673 இலவச சேலைகளும் உற்பத்தி செய்யப்பட்டு  வருகின்றன. இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட வேட்டிகள் அரசு வழிகாட்டுதலின்படி பல்வேறு மாவட்டங்களு்ககு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன, அதை போல் பெண்களை கவரும் வகையில் பல்வேறு வண்ணங்களில் விதவிதமான சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.   

Related Stories: