பனம் பூக்களின் காம்பை வைத்து தயாரிக்கப்படும் மாவளி கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு விற்பனை..!

கடலூர் : கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறுவர்கள் சுழற்றும் மாவளி விற்பனை களைகட்டி உள்ளது. தமிழ்நாட்டில் கார்த்திகை தீபத் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோயில்கள், வீடுகள் மற்றும் நிறுவனங்களில் அகல் விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். மேலும், இத்திருநாளின் போது சிறுவர்கள் கார்த்திகை சுருளை கயிற்றில் கட்டி அதற்கு நெருப்பு மூட்டி வட்டம் வட்டமாக சுற்றி விளையாடுவார்கள்.அதில் இருந்து தீப்பொறிகள் பூக்கள் போல உதிர்ந்து வட்ட வடிவில் பறந்து செல்வதை கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்.

கார்த்திகை சுருள் எனப்படும் மாவளி சுற்றுதல் தற்போது இளைய தலைமுறையினரிடம் மறைந்து வருவதாக கூறும் கைவினை கலைஞர்கள் மீண்டும் இந்த பாரம்பரிய முறையை சிறுவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். பனம் பூக்கள் மலரும் காம்பை காயவைத்து குறைந்த பொருள் செலவில் உருவாக்கப்படும் இந்த தீப்பொறி சிதறவிடும் விளையாட்டு சிறுவர்களிடையே குதூகலம் ஏற்படுத்தும். ஒளி வடிவில் இறைவன் நீக்கமற நிறைந்துள்ளான் என்பதை கொண்டாடும் கார்த்திகை திருவிழாவில் பாரமப்பரிய மாவளி சுழற்றும் விளையாட்டு இடம் பெற வேண்டும் என்பதே கைவினை கலைஞர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.    

Related Stories: