கிணத்துக்கடவு :திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கோவை தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி மற்றும் குளத்துப்பாளையம் திமுக ரேக்ளா குழுவினர் இணைந்து நெகமம் அடுத்த குளத்துப்பாளையம்,குளத்துப்பாளையம்புதூர் சாலையில் ரேக்ளா பந்தயத்தை நடத்தினர். இதில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி,வடசித்தூர்,உடுமலை,மெட்டுபாவி,செட்டியக்காப்பாளையம், நெகமம், சூலூர்,தொண்டாமுத்தூர், செஞ்சேரி, உடுமலை, திருப்பூர், தாராபுரம், கேரள மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இரு நூற்றுக்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் கலந்து கொண்டன.
