மல்லிகை கிலோ உசிலம்பட்டியில் ரூ.5,500 நாகர்கோவிலில் ரூ.4,000

நாகர்கோவில்: கார்த்திகை மாதத்தையொட்டி தோவாளை மலர் சந்தையில் பூ வியாபாரம் நேற்று களைகட்டியிருந்தது. நேற்று முன்தினம் கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்ற பிச்சிப் பூ நேற்று கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கும், நேற்று முன்தினம் 1,500 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப் பூ, நேற்று கிலோ 4 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. பனி பொழிவு மற்றும் மழை காரணமாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பூக்கள் வரத்து குறைந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர். உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிகை பூ நேற்று கிலோ ரூ.5 ஆயிரம் முதல் ரூ.5,500 வரை விற்பனை செய்யப்பட்டது.

Related Stories: