குற்றாலம் மெயின் அருவியில் ஐயப்ப பக்தர்கள் ஆனந்த குளியல்

தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் அதிக தண்ணீர் வரத்து காரணமாக குளிக்க விதிக்கப்பட்ட தடை நேற்று இரவு முதல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றாலத்தில் அவ்வப்போது பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதுகாப்பு கருதி நேற்று பகல் முழுவதும் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

இரவில் தண்ணீர் வரத்து சற்று கட்டுக்குள் வந்ததை அடுத்து மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பகலில் மெயின் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திருப்பிச் சென்றனர். தற்போது தடை விலக்கிக் கொள்ளப்பட்டதால் வெளியூர்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: