ஊட்டி எடக்காடு-கன்னேரி சாலையில் 1 கி.மீ. நடந்து சென்ற சிறுத்தை: சமூக வலை தளங்களில் வீடியோ வைரல்

ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள எடக்காடு-கன்னேரி சாலையில் ஹாயாக நடந்துச் செல்லும் சிறுத்தையின் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, காட்டு யானை, சிறுத்தை, கரடி, காட்டு மாடுகள் மற்றும் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவைகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வருவதால், தற்போது அடிக்கடி மனித-விலங்கு மோதல் ஏற்பட்டுகின்றன. எனவே, இவைகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள கன்னேரி பகுதியில் இருந்து எடக்காடு செல்லும் சாலையில் நேற்று முன்தினம் ஒரு சிறுத்தை வெகுதூரம் நடந்து சென்றுள்ளது. இதை அவ்வழியாக வந்த மக்கள் வீடியோ எடுத்துள்ளனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை இந்த சிறுத்தை வாகனங்களின் முன் எவ்வித அச்சமும் இன்றி ஹாயாக நடந்து செல்கிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories: