திருவாரூர், நாகையை தென்னக ரயில்வே புறக்கணிப்பதாக புகார்: சன்னாநல்லூரில் பயணிகள் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூரில் ரயில் மறியல் போராட்டம் தொடங்கியது. திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்வே திட்டங்களில் டெல்டா பகுதியை தெற்கு ரயில்வே புறக்கணிப்பதாகக்கூறி அனைத்துக்கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர், நாகையை தென்னக ரயில்வே புறக்கணிப்பதாக புகார் எழுந்தது.

இந்த போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு இடதுசாரி கட்சியினர் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக 32 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூரில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் அகழறிவு பாதையில் மூன்று ஆண்டுகள் பணி நிறைவடைந்த நிலையில் இதனால் வரை தினசரி ரயில் சேவை தொடங்கவில்லை எனவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: