கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை வட்டமிட்ட ஹெலிகாப்டர்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை திடீரென சுற்றி வந்த ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விடுமுறை தினமான நேற்று கூட்டம் களை கட்டி காணப்பட்டது.

இந்நிலையில் மதியம் மூன்று மணி அளவில்  கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை வட்டமடித்தபடி திடீரென  ஒரு ஹெலிகாப்டர் பறந்தது.  பின்னர் இந்த ஹெலிகாப்டர்  கோவளம் மீனவ கிராமம் வரை சென்று விட்டு திரும்பி சென்றது. இதனால்  சுற்றுலா பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: