திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மாட வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: கலெக்டர், எஸ்பி நேரடி ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் காத்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மாடவீதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகிேயார் நேரில் ஆய்வு செய்தனர். திருவண்ணாமலையில் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, முன்ேனற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதையொட்டி, சுவாமி திருவீதியுலா நடைபெறும் திருக்கோயில் மாட வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது.

அதையொட்டி, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து, போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட இடத்தை கடந்து ஆக்கிரமித்துள்ள கட்டிடங்கள், இரும்பு தகடுகளால் அமைக்கப்பட்ட மேற்கூரைகள், நடைபாதை கடைகள் போன்ற அனைத்து விதமான ஆக்கிரமிப்புகளும் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

இந்நிலையில், மாட வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை கலெக்டர் பா.முருகேஷ், எஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அப்போது, கோயில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், நகராட்சி ஆணையர் முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும், தேரோடும் மாட வீதியில் தேரோட்டத்துக்கு எவ்வித இடையூறும் இல்லாதபடி, சாலைகளை பழுது நீக்கி சீரமைக்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார். அதோடு, தேர் சீரமைப்பு பணிகளையும் அவர் நேரில் பார்வையி்ட்டார். முழுமையாக சீரமைப்பு பணியை முடித்து, தேரோட்டத்துக்கு முன்பாக அதன் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறையிடம் சான்று பெற வேண்டும் என உத்தரவிட்டார்.

Related Stories: