கட்சிக்கு களங்கம் என கூறி சஸ்பெண்ட் செய்தது மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது: காயத்ரி ரகுராம் பேட்டி

சென்னை: கட்சிக்கு களங்கம் என கூறி சஸ்பெண்ட் செய்தது மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த 8 ஆண்டுகளாக கடன் வாங்கி பலருக்கு உதவி இருக்கிறேன். பாஜகவுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறியது வருத்தம் அளிக்கிறது. புகார் தொடர்பாக விளக்கமளிக்க நேரம் அளிக்காமல் நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளேன். என்னிடம் விசாரணை நடத்தாமல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். காயத்ரி ரகுராம் கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்பட்டுள்ளார்.

Related Stories: