முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (48). பாஜ மாவட்ட துணை தலைவர். இவர் நேற்று திருத்துறைப்பூண்டியில் இருந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பட்டுக்கோட்டைக்கு முத்துப்பேட்டை வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் தனது காரில் புறப்பட்டார். காரை, கணேசன் என்பவர் ஓட்டினார். மங்கள் ஏரி அருகே வளைவில் திரும்பும்போது கார், திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி ஏரிக்குள் பாய்ந்தது.
