தமிழ்நாட்டில் நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்கள், நாளை 7 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு:

6 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு:

செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய 22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு:

நாளை 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும்.

நாளை 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு:

நாளை 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை பலத்த மழை பெய்யக்கூடும். விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

நாளை மறுநாள் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும். சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு:

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் 7ம் தேதி வரை மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சீர்காழியில் 22 செ.மீ. மழை பதிவு:

தமிழகத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 22 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து அதிகபட்ச மழை அளவாக 22 செ.மீ. பதிவாகியுள்ளது. தஞ்சை -18 செ.மீ., கொள்ளிடம் - 16 செ.மீ., சிதம்பரம் -15 செ.மீ., சேத்தியாத்தோப்பு - 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டையில் தலா 12 செ.மீ., காட்டுமான்னார்கோவில், லால்பேட்டையில் தலா 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Related Stories: