நீலகிரியில் தோட்டக்கலைத்துறை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்: தீபாவளி முன் பணம் வழங்கவில்லை எனக் கூறி தர்ணா

நீலகிரி: தீபாவளி முன் பணம் வழங்கவில்லை என்று கூறி 600கும் மேற்பட்ட பூங்கா தொழிலாளர்கள் உள்ளிருப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட 14 அரசு பூங்காக்களில் 600 க்கு மேற்பட்ட தோட்டக்கலை தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்ட தோட்டக்கலை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காவில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இவ்வாண்டு தோட்டக்கலை சார்பில் முன் பணம் வழங்கவில்லை என்று பூங்கா தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒட்டு மொத்தமாக பண்ணை பசுமை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள். இதனால், உதகை அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட முக்கிய பூங்காக்களில் பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.  

Related Stories: