புல்லட் ரயில் திட்டம் கடலுக்கு அடியில் 7 கிமீ சுரங்கப்பாதை: டெண்டர் வெளியீடு

புதுடெல்லி: மும்பை - அகமதாபாத்  இடையே புல்லட் ரயில் திட்டத்தை  செயல்படுத்த ஒன்றிய அரசு தீவிரமாக உள்ளது. இரு நகரங்கள் இடையே மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இதன்மூலம்,  மும்பை - அகமதாபாத்துக்கு இடையே தற்போது உள்ள 6 மணி நேர பயண நேரம் 3 மணி நேரமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு நாட்டின் முதல் புல்லட் ரயில்  திட்டத்துக்கான டெண்டர் விடப்பட்டது. ஆனால், டெண்டர் எடுக்க  யாரும் வரவில்லை. அதனால், கடந்த ஆண்டு நவம்பரில் மீண்டும் டெண்டர் விடப்பட்டது.

இந்நிலையில் இத்திட்டத்துக்கு மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியின் போது நிலங்களை கையகப்படுத்துவதில் பல பிரச்னைகள் ஏற்பட்டது. தற்போது மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஷிண்டே தலைமையிலான  மாநில அரசில் பாஜ முக்கிய கூட்டணி கட்சியாக உள்ளது. இதையடுத்து, புல்லட் ரயில் திட்டம் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இந்த திட்டத்தின்படி மும்பை அகமதாபாத்  பாதையில்  தானே மாவட்டம், ஷீல்பாட்டா மற்றும் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் இடையே 21 கிமீ துாரத்துக்கு  சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதில், 7 கிமீ துாரம் கடலுக்கு அடியில் இந்த சுரங்கப்பாதை செல்லும். இந்த பணிகளுக்காக டெண்டரை தேசிய அதிவிரைவு ரயில் கழகம் வெளியிட்டுள்ளது.

Related Stories: