137 கி.மீ தூரத்திற்கு காஷ்மீரில் மின்சார ரயில் சேவை; காந்தி ஜெயந்தியன்று தொடக்கம்.! இந்திய ரயில்வே அதிகாரிகள் தகவல்

காஷ்மீர்: காஷ்மீர் பள்ளத்தாக்கில் வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் 137 கி.மீ தூரத்திற்கு மின்சார ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக இந்திய ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீர், இந்திய ரயில்வே மற்றும் இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் ஆகியவை இணைந்து கடந்த 2019 முதல் பனிஹால்-பாரமுல்லா வழித்தடத்தில் மின்சார ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கிட்டதட்ட 137 கி.மீ தூரத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், வரும் 26ம் தேதி ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதன்பின் வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். காசிகுண்ட், புட்காம் மற்றும் பாரமுல்லா ஆகிய மூன்று முக்கிய துணை நிலையங்கள் மூலம் மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் 60 சதவீத எரிபொருள் பயன்பாட்டையும் மிச்சமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2013ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் காஷ்மீரில் முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: