குன்னூர் கல்லூரியில் செண்டை மேளம் முழங்க மாணவிகள் கொண்டாடிய ஓணம் திருவிழா

குன்னூர் : குன்னூரில் செண்டை மேளம் முழங்க ஆடல் பாடல்களுடன் கோலாகலமாக ஓணம் திருவிழா நடைபெற்றது.கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் திருவிழா நாளை 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. மாவேலி மன்னனை வரவேற்கும் விதமாக அனைத்து வீடுகளிலும், பூக்கோலமிட்டு வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், குன்னூரில் உள்ள தனியார் கல்லூயில் மாணவிகள் சார்பில், கோலாகலமாக ஓணம் திருவிழா நடத்தப்பட்டது. இதில், கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து இயற்கையை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி, பூக்கள் மட்டுமில்லாமல், தானியம், வண்ண பூக்களால் அத்தி பூக்கோலம் இட்டு மாவேலி மன்னனை வரவேற்றனர்.

இதுமட்டுமில்லாமல் திருவாதிரைக்களி எனப்படும் பாரம்பரிய நடனத்தில் ஏராளமான பெண்கள் ஆடி அசத்தினர்.  பாலக்காட்டில் இருந்து வந்திருந்த செண்ட மேளக் கலைஞர்கள் இசை வாத்தியங்கள் முழங்க மாணவிகள் மாவேலி நடனம் ஆடினர்.  மலையாள மொழி பேசும் மாணவிகளுடன் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.

Related Stories: