தீவிரவாதிகளுக்கு தகவல் பரிமாற்றம்: மதரசா ஆசிரியர் ஜம்முவில் கைது

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் உள்ள தூல் பகுதியை சேர்ந்தவர் அப்துல் வாகித் (25). இவருக்கு மனைவியும், 7 மாத குழந்தையும் இருக்கின்றனர். தட்பேத் கிராமத்தில் உள்ள மதரசாவில் வாகித், ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவரை போலீசார் நேற்று திடீரென கைது செய்தனர். ராணுவ உளவு அமைப்பு மூலமாக வாகித் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார். இதில், பாதுகாப்பு அமைப்புகள் சம்பந்தப்பட்ட பல்வேறு முக்கிய தகவல்களை பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு அவர் பகிர்ந்து வந்தது உறுதியானது.

இதைத் தொடர்ந்து, ராணுவ உளவு பிரிவும், காஷ்மீர் புலனாய்வு அமைப்பும் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளன. இதில், கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் முதல் ஜம்முவில் உள்ள பாதுகாப்பு அமைப்புகள் குறித்த புகைப்படம், வீடியோக்களை பாகிஸ்தானை  சேர்ந்த, ‘காஷ்மீர் ஜன்பாஸ் போர்ஸ்’ என்ற தீவிரவாத அமைப்புக்கு அனுப்பி வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

Related Stories: