பாலிவுட் போகிறார் அனுபமா

சென்னை: இந்தி படத்தில் நடிப்பதற்காக பாலிவுட் செல்கிறார் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷுடன் கொடி, அதர்வா ஜோடியாக தள்ளிப்போகாதே படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் கார்த்திகேயா 2 என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். இந்த படம் வட இந்தியாவிலும் நல்ல வசூலை ஈட்டியுள்ளது. இதையடுத்து பாலிவுட் பிரபலங்களின் கவனத்தை அனுபமா ஈர்த்திருக்கிறார். இதையொட்டி பாலிவுட்டில் நடிக்க அனுபமாவுக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

தற்போது இந்தியில் சமந்தா, ரகுல் பிரீத் சிங், பூஜா ஹெக்டே, ராஷ்மிகா, ராசி கன்னா, ரெஜினா என தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் அனுபமாவும் சேர்ந்திருக்கிறார். தற்போது பாலிவுட்டில் நுழைந்திருக்கும் புதிய இயக்குனர் ஒருவர், அனுபமாவிடம் கதை சொல்ல நேரம் கேட்டுள்ளாராம். அவர் கேரளா வந்து, கதை சொல்ல இருக்கிறார். முதல் படமே பெரிய பேனர் படமாக இருக்க வேண்டும் என அனுபமா விரும்புகிறார். அவர் நினைத்ததுபோல் இது பெரிய படமாக அமைந்தால் கால்ஷீட் தருவாராம்.

Related Stories: