சின்சினாட்டி: அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடந்தமுதல் சுற்று போட்டியில் இங்கிலாந்தின் எம்மா ராடுகானு , 6-4,6-0 என்ற செட்கணக்கில் அமெரிக்காவின் 40வயதான செரீனா வில்லியம்சை வீழ்த்தினார். ருமேனியாவின் சிமோனா ஹாலெப், 6-3,3-6,6-3 என ரஷ்யாவின் அனஸ்தேசியாவை வென்றார். எஸ்டோனியா அனெட் கொண்டவீட் 3-6,7-5,6-4 என செக்குடியரசின் தெரேசா மார்ட்டின் கோவாவையும், லாத்வியாவின் ஜெலீனா ஓஸ்டாபென்கோ 6-4,6-4 என பிரேசிலின் ஹடாட் மியாவையும் வென்றனர்.