பட்நவிசுக்கு உள்துறை, நிதித்துறை முதல்வர் ஷிண்டேவுக்கு ‘டம்மி’ துறை ஒதுக்கீடு: மகாராஷ்டிராவில் பாஜ ஆதிக்கம்

மும்பை: சிவசேனா அதிருப்தி அணியின் தலைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, கடந்த ஜூன் 30ம் தேதி மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக பாஜ,வின் மூத்த தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் பொறுப்பேற்றார். ஒரு மாதத்துக்கு பிறகு கடந்த 9ம் தேதி அமைச்சரவையில் புதிதாக 18  அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் முதல்வர், துணை முதல்வர் உட்பட அனைவருக்கும் நேற்று இலாகாக்களை முதல்வர் ஷிண்டே  ஒதுக்கினார்.  நகர்புற வளர்ச்சி துறையை தன்னிடம் வைத்து கொண்ட ஷிண்டே, பட்நாவிசுக்கு முக்கிய துறைகளான உள்துறை, நிதி மற்றும் திட்டம் ஆகியவற்றை ஒதுக்கி உள்ளார். மேலும், பாஜ.வை சேர்ந்தவர்களுக்கு அனைத்து முக்கிய துறைகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம், இம்மாநிலத்தில் ஷிண்டே முதல்வராக இருந்த போதிலும் பாஜ.வின் ஆதிக்கமே நிலவுகிறது என்பது உறுதியாகி இருக்கிறது.

Related Stories: