திமுகவுடன் தொகுதி பங்கீடு எப்போது?.. பிரேமலதா பேட்டி

 

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள திருப்பாற்கடல் கிராமத்தில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான பிரசன்னவெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என கேட்கிறீர்கள். திமுக தரப்பில் இருந்து இன்னும் எங்களை அழைத்து பேசவில்லை. நாளை அல்லது நாளை மறுநாள் அழைத்து பேசுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

அதன் பிறகுதான் எத்தனை தொகுதிகள் என உறுதியாகும். அதன்பிறகு வேட்பாளர்கள் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும். எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான மனோகரன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தினேஷ்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: