மதுரை: மதுரை மாநகர் மாவட்ட திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஒன்றிய அரசைக் கண்டித்து முனிச்சாலை சந்திப்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: தமிழ்நாட்டில் திடீர் பிரவேசமாக ஒருவர் நுழைந்திருக்கிறார். அவரைப்பற்றி பற்றி தனிப்பட்ட முறையில் நான் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் அமெரிக்காவிலே 1984ல் ஈழத்தமிழர் மாநாட்டுக்கு நான் சென்றிருந்தபோது. அந்த நாட்டின் பிரதான கட்சிகளான ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சிகளின் மாநாட்டுக்கு சென்றேன்.
அப்போது வேட்பாளர்களாக நிற்பவர்கள், ‘நான் ஒழுங்கான முறையில் குடும்பம் நடத்துகிறேன். எனக்கு ஒரு மனைவி இருக்கிறாள். எனக்கு பிள்ளைகள் இருக்கின்றன. ஒரு கட்டுக்கோப்பான இல்லறத்தை நான் நடத்திக் கொண்டிருக்கிறேன். என்னை இந்த தேர்தலில் வெற்றி பெறச் செய்யுங்கள்’ என்றனர். நம் நாடு கற்பையும், மானத்தையும் உயிரினும் பெரிதாகக் கொண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒழுக்கத்தை முன்னிறுத்தி வாழ்ந்து வருகிற சமூகத்தை கொண்டது.
இல்லத்தரசிகளும், இல்லத்தரசர்களும் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி, குழந்தைகளை பாசத்தோடு வளர்த்து, அவர்களுக்கு கல்வி, அறிவு, சுயமரியாதையை ஊட்டி இனிய குடும்பங்களை நடத்துகின்றனர். கண்ணகி, காரைக்கால் அம்மையார், வீரத்தாய் வேலுநாச்சியார் உலவிய தமிழ்நாட்டில் எப்படியும் வாழ்க்கை நடத்துவேன்; யாரோடும் செல்வேன்; யாரோடும் கரம் கோர்ப்பேன். யாரோடும் மேடைக்கு வந்து நிற்பேன் என்று சொல்லக்கூடிய அபாயம் நேர்ந்திருக்கிறது’’ என்றார்.
தமிழ்நாட்டில் இன்று எப்படியும் வாழ்க்கை நடத்துவேன்; யாரோடும் செல்வேன்; யாரோடும் கரம் கோர்ப்பேன். யாரோடும் மேடைக்கு வந்து நிற்பேன் என்று சொல்லக்கூடிய அபாயம் நேர்ந்திருக்கிறது.
