ஒண்ணுக்கே வழியில்ல… விஜய்யை பொளந்து கட்டிய சண்முகம்

 

சிவகங்கை மாவட்டம், பரமக்குடியில் நேற்று நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிதியளிப்பு விழாவில், அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பேசியதாவது: பாஜ – அதிமுக கூட்டணி புறக்கணிக்கப்பட வேண்டும். தோற்கடிக்கப்பட வேண்டும். இந்தியாவில் 2,260 அமைப்புகளும், 240 அமைப்புகள் வெளிநாடுகளிலும் அமைத்து ஆர்எஸ்எஸ் அதற்கு வழிகாட்டி வருகிறது.

இதில் ஒரு அமைப்பு கலவரத்தை உருவாக்குவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்துக்களுக்கும், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கும் வெறுப்பு அரசியலை உருவாக்கி வருகிறது. தமிழகத்தில் அனைவரும் அமைதியாகவும் சமத்துவத்துடனும் வாழ்ந்து வருகிறோம். இதனை சீர்குலைக்கும் விதமாக பாஜ உள்ளது.

திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடி தனது தனிப்பட்ட செல்வாக்கை வைத்து ஈரானிடம் கச்சா பொருள்கள் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனக் கூறுகிறார். ஆனால், அதை ஈரான் அரசு மறுத்திருக்கிறது. பிரதமர் மோடியும், பாஜ காரர்களும் பொய் சொல்வதையே பிழைப்பாக வைத்துள்ளனர்.

நயினார் நாகேந்திரன் தான் சொந்தமாக காஸ் சிலிண்டர் ஏஜென்சி வைத்துள்ளதாகவும் போதுமான இருப்பு உள்ளது என தெரிவித்ததால், மக்கள் கூடியுள்ளனர். இதனால் பதற்றம் அடைந்த நயினார் கடையை காலி செய்து விட்டு ஓடி விட்டார். எரிவாயு சிலிண்டர் கிடைக்காததால் தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் நிலைக்கு வந்துவிட்டது. இப்போது ஒரு கட்சியின் தலைவர் (விஜய்) சொல்கிறார், ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர் இலவசம் என. தற்பொழுது ஒரு சிலிண்டர் கிடைக்க கூட வழியில்லாமல் உள்ளது.

எடப்பாடி 3 சிலிண்டர் இலவசம் என்று அறிவிக்கிறார். அதற்கு எதிராக 6 சிலிண்டர் வழங்கப்படும் என தவெக சொல்கிறது. எடப்பாடி ரூ.2,000 சொன்னால், இவர் ரூ.2,500 எனக் கூறுகிறார். இதுல என்ன புரட்சி? தமிழகத்தை மாற்றுவதற்கு தவெக என்ன கொள்கை வைத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* கூட்டணியில் இழுபறி இல்லை

ஒன்றிய அரசின் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘கூட்டணியில் எந்தவிதமான இழுபறியும் இல்லை. கூட்டணியில் பல கட்சிகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அரசியலில் அனுபவம் இல்லாத காரணத்தினால்தான் நடிகர் விஜய் சிபிஐ விசாரணை கேட்டுள்ளார். அவர் கேட்டதற்கான விளைவையே கரூர் சம்பவத்தில் அனுபவித்து கொண்டு இருக்கிறார்’’ என்றார்.

Related Stories: