திருவண்ணாமலை: அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டை தொடர்ந்து ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறது. பேரிடர் காலங்களில் வழங்க வேண்டிய புயல் நிதி, கல்வி நிதி, ஜல்ஜீவன் பங்குத்தொகை, நூறு நாள் வேலைத்திட்ட நிதி உள்ளிட்ட எந்த நிதிகளையும் ஒன்றிய அரசு மாநில அரசிற்கு வழங்காமல் வஞ்சித்து வருகிறது.
தற்பொழுதுள்ள காஸ் தட்டுப்பாட்டால் தமிழக மக்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி இருக்கின்றனர். தேர்தலில் பாஜ-அதிமுக கூட்டணிக்கு மக்கள் தக்கபாடம் புகட்டுவார்கள். தோழமைக் கட்சிகளோடு தொகுதி பங்கீடு குறித்து தற்பொழுது பேசி வருகிறோம். அடுத்த கட்டமாக தொகுதி குறித்து தோழமையோடு தோழமையாக பேசுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
