நன்னிலம் புதிய தாலுகா அலுவலகத்திற்காக இடிக்கப்படும் ஆங்கிலேயர்கள் ஆட்சிகால கட்டிடம்

நன்னிலம்: நன்னிலத்தில் புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்காக ஆங்கிலேயர்கள் ஆட்சிகால கட்டிடம் இடிக்கப்பட உள்ளது. திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், பழமையான, தாலுகாவில் ஒன்றாகும். நன்னிலம் தாலுகா, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் நெற்களஞ்சியம் எனப் பெயர் பெற்றது. தற்போது தாலுகா அலுவலகம் இயங்கி வரும் கட்டிடம், நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடம் ஆகும். இக்கட்டிடம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு, அவர்கள் நிர்வாகம் நடத்திய இடமாகும். மிகவும் பழமையான கட்டிடம் என்பதனால், கட்டிடம் சிதலமடைந்து, மழை காலங்களில், அலுவலகங்கள் நடைபெற சிரமங்கள் ஏற்பட்டது.

நிலையில், கட்டிடத்தின் பழுது நிலைகளை கண்டறிந்து, தமிழக அரசு புதிய கட்டிடம் கட்ட, நிதி ஒதுக்கியது. இதை தொடர்ந்து தற்போது இயங்கி வந்த அலுவலகங்கள், மாற்று இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. நன்னிலம் தாலுகா அலுவலகம், ஏற்கனவே இருந்த இடத்திலிருந்து மாற்றப்பட்டு, திருவாரூர் முதன்மை சாலையில், அரசு கலைக்கல்லூரிக்கு அருகில், ஏற்கனவே நீதிமன்றம் இயங்கிவந்த கட்டிடத்திற்கு, மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் அலுவலகம், நல்லமாங்குடி இயங்கி வரும் மாணவர் விடுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக, பழைய கட்டிடத்தை இடிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

Related Stories: