TNSED செயலில் மட்டுமே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: TNSED செயலில் மட்டுமே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை  உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் ஆசிரியர்களுக்கான செயலி வருகைப்பதிவு நாளை முதல் அமலுக்கு வருகிறது.  விடுப்பு, தற்செயல் விடுப்பு உள்ளிட்டவற்றை செயலி வழியாக மட்டுமே ஆசிரியர்கள் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.  பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் வருகைப்பதிவு நடைமுறை அமலுக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: