மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தில் மாணவிகள் 18ம் தேதிக்குள் உள்ளீடு செய்ய வேண்டும்: கல்லூரி கல்வி இயக்குனர் அறிவிப்பு

சென்னை: கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி அனுப்பிய சுற்றறிக்கை: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி பெற்ற மாணவியர்கள் விவரம் www.penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளீடு செய்யவும், விடுபட்ட கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகள் மற்றும் மாணவிகள் பதிவேற்றம் செய்யும் போது இதர குறைபாடுகள் ஏற்பட்டதின் விளைவுகளை சரி செய்யும் பொருட்டு தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் தெரிவிக்கப்பட்டு தற்போது சரி செய்யப்பட்டு உரிய வழிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் விவரங்களை பதிவேற்றம் செய்ய வரும் 18ம் தேதி இறுதி நாளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 18ம் தேதி மாலை 4 மணிக்குள் இயக்குனருக்கு இந்த அலுவலக எம்பிரிவு இணையதளமான dcemsection@gmail.com என்கிற முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

Related Stories: