100% வரி உயர்வை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் இன்று அரைநாள் கடையடைப்பு; வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் 100 சதவீத வரி உயர்வை கண்டித்து வியாபாரிகள் இன்று அரை நாள் கடையை அடைத்து கண்டன ஆர்ப்பாட்டம்

நடத்தினர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் வீடு மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த சொத்து வரியை மறுபரிசீலனை செய்து குறைக்க வேண்டும் என நெல்லிக்குப்பம் நகர அனைத்து தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இந்த மனு மீது அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் நெல்லிக்குப்பம் நகர அனைத்து தொழில் வர்த்தக சங்கம் சார்பில் இன்று காலை முதல் மதியம் 12 வரை அரை நாள் கடைகளை மூடி போராட்டம் நடத்தினர். மேலும், நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தில் 100% வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டம் காரணமாக நெல்லிக்குப்பம் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories: