தி.மலை அண்ணாமலையார் கோயிலில் ஐகோர்ட் தலைமை நீதிபதி தரிசனம்

திருவண்ணாமலை: சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி. கங்காபுர்வாலா கடந்த 23ம் தேதி ஓய்வு பெற்றார். இதைதொடர்ந்து மூத்த நீதிபதியான மகாதேவனை பொறுப்பு நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் திரவுபதிமுர்மு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் நேற்றுமுன்தினம் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார்.

இந்நிலையில் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் இன்றுகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவரை, கலெக்டர் பாஸ்கரபாண்டியன், மாவட்ட நீதிபதி மதுசூதனன், கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் வரவேற்றனர். முதலில் அண்ணாமலையார் சன்னதி, பின்னர் உண்ணாமுலையம்மன் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு, கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்து.

The post தி.மலை அண்ணாமலையார் கோயிலில் ஐகோர்ட் தலைமை நீதிபதி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: