சென்னை மெரினாவில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை: மூத்த நிர்வாகிகள் பங்கேற்பு..!!

சென்னை: சென்னை மெரினாவில் ஜெயலலிதாவின்  நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக இரட்டை தலைமை பதவியை ரத்து செய்தும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரான தேர்வு செய்யப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின்  நினைவிடத்தில் மரியாதை செய்தார். அவருடன் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். அப்போது எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி தொண்டர்கள் கோஷமிட்டனர்.

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். நினைவிடத்தை தொடர்ந்து அண்ணா நினைவிடத்திலும் பழனிசாமி மரியாதை செலுத்தினார். பின்னர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தொண்டர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நிகழ்ந்த மோதலில் கட்சித் தொண்டர்கள் சிலர் காயமடைந்தனர்.

Related Stories: