ஆர்டிஐயின் கீழ் ஆதீனங்கள் வராது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஆதீன மடம் மற்றும் ஆதீன கர்த்தர் குறித்த விபரங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டு சிலர் தொந்தரவு செய்கின்றனர். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பொது நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் தான் வரும். ஆதீன மடங்கள் பொது நிறுவனங்கள் அல்ல. ஆர்டிஐயில் கேட்கும் விபரங்களுக்கு பதிலளிக்குமாறு அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். பொது நிறுவனம் அல்ல என்பதால் ஆதீன மடங்கள் ஆர்டிஐயின் கீழ் வராது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆதீன மடங்கள் பொது நிறுவனங்கள் அல்ல என்பதால் ஆர்டிஐயின் கீழ் வராது என உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: