டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் தரையிறங்கியதால் பரபரப்பு

கராச்சி: டெல்லியில் இருந்து துபாய் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறால் கராச்சியில் இறக்கப்பட்டது. ஸ்பைஸ்ஜெட் விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்டு துபாய் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, திடீரென விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், இதனால் விமானம் அவசரமாக பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் தரையிறக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஸ்பைஸ்ஜெட் விமானம் துபாய் செல்வதற்கு முன்பாகவே தொழில்நுட்ப கோளாறு இருப்பதை தெரிந்து கொண்டதால், விமானிகள் உடனடியாக விமானத்தை தரையிறக்க முடிவு செய்தனர். அப்பொழுது, அருகாமையில் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் இருந்ததால், அங்கு விமானம் இறக்கப்பட்டது.

இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. சமீப நாட்களாக ஸ்பைஸ்ஜெட் விமானங்கள், பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகளை சந்தித்து வருவது வழக்கமாகி வருகிறது. சமீபத்தில், பட்னாவில் இருந்து புறப்பட்ட ஒரு விமானம், பறவை தாக்குதல் ஏற்பதாக கூறி, மீண்டும் அவசரஅவசரமாக பட்னா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அதேபோல கோவாவில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக புனே செல்லாமல் மீண்டும் திரும்பி கோவாவுக்கே வந்தது. விமானத்தினுள் புகை வந்ததாக பயணிகள் புகார் ஒன்றையும் அளித்திருந்தனர்.

இதுபோன்று பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதைத்தவிர ஸ்பைஸ்ஜெட் பயன்படுத்தும் information technology உட்கட்டமைப்பை, ஹேக் செய்து மிரட்டியதாகவும் தகவல் வெளியானது. இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறுகள் அடிக்கடி ஸ்பைஸ்ஜெட் குறித்து வந்துகொண்டிருப்பது கவலையளிப்பதாக இருப்பதால் அதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.  

Related Stories: