இவிஎம் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு; எதிர்க்கட்சிகளுக்கு விழுந்த பலத்த அடி: பிரதமர் மோடி கருத்து

அராரியா: மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு விழுந்த பலத்த அடியாகும் என பிரதமர் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் உள்ள அராரியா,முங்கேர் மக்களவை தொகுதிகளில் பிரதமர் மோடி நேற்று பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசுகையில்,‘‘காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆட்சியின் போது ஆளும் கட்சியை சேர்ந்த ரவுடிகள் வாக்கு சாவடிகளை கைப்பற்றி வலுக்கட்டாயமாக தங்கள் வாக்குகளை பதிவு செய்வார்கள். இதனால் ஏழைகள்,பழங்குடிகள்,தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் தங்களுடைய ஜனநாயக உரிமையை நிலைநாட்ட முடியாத நிலை இருந்தது.

மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் வந்த பிறகு இது போன்ற கட்சிகளால் தேர்தலில் முறைகேடுகளை செய்ய முடியவில்லை. இதனால் தான் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை பற்றி கேள்வி எழுப்பி மிக பெரிய பாவத்தை செய்துள்ளனர். இதற்காக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும். அனைத்து வாக்குசாவடிகளிலும் பதிவாகும் வாக்குகளை வாக்குபதிவு ஒப்புகை சீட்டுகளுடன் சரி பார்க்க கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இது எதிர்க்கட்சிகளுக்கு விழுந்த பலத்த அடியாகும்.’ என்றார்.

The post இவிஎம் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு; எதிர்க்கட்சிகளுக்கு விழுந்த பலத்த அடி: பிரதமர் மோடி கருத்து appeared first on Dinakaran.

Related Stories: