டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்...

* உளுந்தம் பருப்பு வடைக்கு அரைக்கும்போது தண்ணீர் அதிகமாகிவிட்டால், கொஞ்சம் பச்சரிசி மாவைத் தூவினால் தண்ணீரை அரிசி மாவு உறிஞ்சிவிடும்.

* வெதுவெதுப்பான உப்புநீரில், சிறிதுநேரம் போட்டு வைத்து, பிறகு பயன்படுத்தினால் பனீர் துண்டுகள் மென்மையாக இருக்கும்.

* தேங்காய் சாதம் கிளறும்போது, அதில் இரண்டு அப்பளத்தைப் பொரித்து நொறுக்கிப் போட்டு சேர்த்துக் கிளறினால் சாதம் பார்க்க கலர்ஃபுல்லாகவும், சாப்பிட சுவையாகவும் இருக்கும்.

* மெழுகுவர்த்தி ஏற்றுவதற்கு முன் சுமார் 3 மணி நேரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து எடுத்த பிறகு அந்த மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தால் உருகி பக்கவாட்டில் வழியாமல் இருக்கும்.

* மட்டன் பிரியாணி செய்யும்போது, மட்டனை துண்டுகளாக வெட்டி, சிறிதளவு எலுமிச்சைச்சாறு கலந்து தயிரில் அரைமணி நேரம் ஊறவைத்தால் மட்டன் நீச்ச வாடை இல்லாமல் இருப்பதுடன் சாஃப்டாகவும் இருக்கும்.

* சப்பாத்தி செய்து முடித்த பின், சூடான சப்பாத்திக் கல்மீது பூண்டுகளை வைத்து எடுத்தால் எளிதாக உரிக்கலாம்.

* மோர்க்குழம்பு செய்து இறக்கும்போது சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கினால் வாசனையாக இருக்கும்.

* இட்லி மாவு கெட்டியாக இருந்தால் நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப்பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும்.

* உருளைக்கிழங்கு பொரிக்கும் முன்பு சிறிதளவு பயத்தம் மாவை தூவுங்கள். பொரியல் மொறுமொறுப்பாக, சுவை அசத்தலாக இருக்கும்.

* அரிசி களைந்த இரண்டாவது கழுநீரை சமயலுக்குப் பயன்படுத்தலாம். இதில் வைட்டமின் B6 மற்றும் B12 இருக்கிறது. இந்த நீரில் புளி ஊற வைக்கலாம், காய்கறி வேகவிடலாம்.

>