முகச்சுருக்கம் மறைந்து இளமையான தோற்றம் பெற!

நன்றி குங்குமம் டாக்டர்

எப்போதும் இளமையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் இருப்பது இயல்பே. ஆனால், தற்போதைய மாறுபட்ட வாழ்க்கை சூழல், உணவு முறை ஆகிய காரணத்தினால், வயதான பிறகு முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் இளம் வயதிலேயே சிலருக்கு ஏற்படுகிறது. இதற்கு காரணம், சருமத்தின் கடைசி அடுக்கில் இருக்கும் எபிடெர்மிஸ் செல் உற்பத்தி சீராக இருக்கும் வரை சருமத்தில் சுருக்கங்கள் விளைவதில்லை இவற்றின் உற்பத்தி குறையும்போது கொலாஜன், எலாஸ்டின் குறைந்து தசைகளை தளரச் செய்வதால் சருமத்தின் இறுக்கம் தளர்ந்து விரிவடைகிறது. இதனால், சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள், நிறம் மாறுதல் போன்றபிரச்னைகள் ஏற்படுகிறது. இவ்வாறு இளம் வயதிலேயே ஏற்படும் முகச்சுருக்கங்களை எதிர் கொள்வதற்கு சில எளிய ஆலோசனைகளை பார்க்கலாம்.

செயற்கை க்ரீம் பூச்சுகளை தினமும் பயன்படுத்துபவர்களாக இருந்தால், குறிப்பிட்ட நேர இடைவெளியில் அல்லது இரவு தூங்குவதற்கு முன்பு மேக்கப்பை கட்டாயம் துடைத்து முகத்தை சுத்தமான நீரில் கழுவி முகத்தை உலரவிட வேண்டும். பிறகு சருமத்தின் தன்மைக்கேற்ப ஆயில் மசாஜ் செய்து வந்தால் முகத்தில் சருமத்துவாரங்களில் இருக்கும் அழுக்குகள், இறந்த செல்கள் நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும். சருமத்தின் ஈரப்பதம் காக்கப்பட்டு சருமம் விரைவில் தளர்வடைவதும் தடுக்கப்படும். தொடர்ந்து இதை செய்து வந்தால் வயது கூடினாலும் உங்கள் முகத்தில் சுருக்கம் விழாது. இளமையாய் வைத்திருக்கவும் செய்யும்.

அடுத்தபடியாக உடலில் அதிகளவு நீர்ச்சத்து குறையும் போது டிஹைட்ரேட் பிரச்னை உண்டாகும். இது உண் டாகும் போது உடல் ஆரோக்கிய இழப்பும் சருமத்தில் சுருக்கங்களும் அதிகரிக்க தொடங்கும். அதனால் தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. தாகம் இல்லையென்று தவிர்க்கக் கூடாது.தினமும் ஒரு கைப்பிடி அளவு ஸ்ட்ராபெரி அல்லது 3 நெல்லிக்காய்களை சாப்பிடலாம். நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதுவே சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

தக்காளி பழச்சாறு, நன்றாகப் பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை முகத்தில் தடவி வந்தால் முக சுருக்கம் மறையும்.தரமான சந்தனப்பவுடருடன் கிளிசரின் சேர்த்து, பேஸ்ட் போன்று நன்கு குழைத்து, அதை முகத்தில் நன்கு பூசி, சிறிது நேரத்திற்குப் பிறகு கழுவிவிட வேண்டும். இதை வாரம் ஒருமுறை செய்து வர, முகச்சுருக்கம் நீங்கும். இதோடு கற்றாழை ஜெல் சேர்க்கலம்.கற்றாழை மிகச் சிறந்தது. இதற்கு ஹீலிங் ப்ராபர்ட்டி அதிகம்.

வெள்ளரி, பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு போன்றவற்றை தனித்தனியாகவோ அல்லது சேர்த்தோ பன்னீர் விட்டு அரைத்து, தினமும் ஓய்வு கிடைக்கும் போது முகத்தில் இருக்கும் அழுக்கை நீக்கி பிறகு ஃபேஸ் பேக் போட்டு அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர. ஒரு வாரத்தில் முகத்தில் இருக்கும் கோடு, சுருக்கம் மறைவதைப் பார்க்கலாம். கடலை மாவு, தயிர் ஒரு சிறந்த தேர்வு. வாரத்தில் இருமுறை இந்த ஃபேஸ் பேக் டிரை பண்ணலாம்.

வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி6, சி உள்ளிட்டவை இருப்பதால் இதை சருமத்தில் தடவினால் செல் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.ஆர்கன் ஆயில் என்று ஒன்று இருக்கிறது. இதை பயன்படுத்தினாலும் சரும பாதிப்புகளை தவிர்க்கலாம்.தயிரில் லாக்டிக் ஆசிட்டும், அதிலுள்ள வைட்டமின் ஈயும் சருமத்தில் உள்ள செல்களை புதுப்பிக்க உதவுகிறது. மஞ்சள் சிறப்பான கிருமிநாசினி. ரோஸ் வாட்டர், வைட்டமின் இஎண்ணெய் உள்ளிட்டவற்றையும் சருமப் பராமரிப்பிற்கு பயன்படுத்தலாம். முகப்பரு மற்றும் எக்சிமாவை குறைக்கிறது. இதில் உள்ள ஆன்டி-இன்ஃப்ளமேட்ரி பண்புகள் முகப்பரு மற்றும் அதனால் ஏற்படும் தழும்புகளை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், படிப்படியாக முகப்பரு இருந்ததற்கான அடையாளங்களை குறைக்கும்.

எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்குவதிலும், புதிய செல்களின் வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. சருமத்தை புத்துணர்ச்சியாக உணரவைக்கும். மேலும், சருமத்தில் வயதான தோற்றம் ஏற்படாமல் பாதுகாக்கும். இளமையான சருமம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.சிலர் குளியலுக்கு அதிக சூடுள்ள வெந்நீரை பயன்படுத்துவார்கள். அப்படி செய்யும்போது விரைவில் சருமம் தளர்ந்து சுருக்கங்கள் தோன்றும். எனவே, முடிந்தளவு குளிர்ந்த நீரோ அல்லது மிதமான சூட்டில் பயன்படுத்தலாம். முகத்துக்கு பொலிவை தருவதில் சுத்தமான குளிர்ந்த நீரும் முக்கிய பங்குவகிக்கிறது.

சருமத்தை ஆரோக்கியத்துடன் பராமரிக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டாம். அதிகமாக துரித உணவுகளையும் தவிர்க்க வேண்டும். சரிவிகித உணவு, சீரான உடற்பயிற்சி மிகவும் அவசியம்.

தொகுப்பு: ரிஷி

The post முகச்சுருக்கம் மறைந்து இளமையான தோற்றம் பெற! appeared first on Dinakaran.

Related Stories: