கேரளாவில் மீண்டும் பருவமழை தீவிரம்: 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கும். ஆனால் இந்த வருடம் 3 நாட்களுக்கு முன்பே பருவமழை தொடங்கியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் கேரளாவில் பருவமழை  மீண்டும் தீவிரமடைந்துள்ளது. திருவனந்தபுரத்திலும் மற்றும் வட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று, நாளை மற்றும் 3ம் தேதி ஆகிய 3 நாட்களுக்கு  வயநாடு, காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு உட்பட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Related Stories: