அரிசி, பால் பவுடர் அனுப்பியது: இலங்கைக்கு இந்தியா ரூ65.3 கோடிக்கு உதவி

கொழும்பு: இலங்கைக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் அனுப்பிய அரிசி, குழந்தைகளுக்கான பால் மாவு, மருந்துகள் நேற்று வந்தடைந்தது.

கடும் நிதி, பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு மனிதாபிமானம், இந்தியா-இலங்கை இடையேயான நட்புறவின் அடிப்படையில் பெட்ரோலுக்கான கடன் உள்பட இந்தியா தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறது. இதனால், உணவு, பால் மாவு, மருந்து தட்டுப்பாட்டை போக்க இந்தியா அவ்வபோது இவற்றை அனுப்பி உதவுகிறது.

இந்நிலையில், இந்தியா அனுப்பிய ரூ65.3 கோடி மதிப்பிலான 14,700 மெட்ரிக் டன் அரிசி, குழந்தைகளுக்கான 250 மெட்ரிக் டன் பால் மாவு, 38 மெட்ரிக் டன் உயிர் காக்கும் மருந்துகள் பொருட்கள் நேற்று இலங்கை துறைமுகம் வந்தடைந்தது. இவற்றை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே, இலங்கை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புகவெல, வர்த்தக அமைச்சர் நலின் பெர்னான்டோ மற்றும் எம்பி.க்கள் பெற்று கொண்டனர்.

Related Stories: