13.90 கோடி மதிப்பீட்டில் வீராங்கல் ஓடை சீரமைப்பு பணி: அமைச்சர் தொடங்கி வைத்தார்

ஆலந்தூர்: ஆண்டுதோறும் பருவ மழை காலங்களில் ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, நிலமங்கை நகர், பாலாஜி நகர், சரஸ்வதி நகர், ஏஜிஎஸ் காலனி, புழுதிவாக்கம், ராம் நகர், பத்மாவதி நகர், சீனிவாசா நகர் போன்ற பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதை தடுக்க 4 கிலோ மீட்டர் நீளத்தில் வீராங்கல் ஒடை அமைக்கப்பட்டது. காலப்போக்கில் இந்த ஓடையில் சாக்கடை நீர் மற்றும் கழிவுகள் கலந்ததுடன், செடி, கொடிகள் வளர்ந்து தூர்ந்தது.  எனவே, இந்த ஓடையை தூர்வாரி, சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்பேரில், நீர்வளத்துறை சார்பில் வீராங்கல் ஒடையை தூர்வாரி சீரமைத்து, பக்கவாட்டு தடுப்புச்சுவர் அமைக்க ₹13.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன் தலைமை வகித்தார். 165வது வார்டு கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத் முன்னிலை வகித்தார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் பூஜையை தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில், மண்டல உதவி ஆணையர் பாஸ்கரன், ஆலந்தூர் பகுதி திமுக செயலாளர் பி.குணாளன், மாநகராட்சி கவுன்சிலர் சாலமோன், வட்ட செயலாளர்கள் கே.ஆர்.ஜெகதீஸ்வரன், ஜெ.நடராஜன் மற்றும் நலச்சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: