ஹாலே: ஜெர்மனியின் ஹாலே நகரில் நடந்த ஹாலே ஓபன் ஆடவர் ஒற்றையர் பைனலில் ஏடிபி தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவும், 12ம் இடத்தில் உள்ள போலந்தின் ஹியூபர்ட் ஹர்காசும் மோதினர்.
இதில் முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் ஹியூபர்ட் ஹர்காஸ் எளிதாக கைப்பற்றினார். முதல் செட்டில் ஹர்காசின் முதல் சர்வீஸ்கள் அனைத்தும், கச்சிதமாக விழுந்தன. ஆனால் மெட்வடேவ், முதல் செட்டில் தனது முதல் சர்வீஸ்களில் அதிகம் தடுமாறினார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஹர்காஸ், துல்லியமான பிளேஸ்மென்ட்கள் மூலம், அடுத்தடுத்து மெட்வடேவின் கேம்களை பிரேக் செய்து, முதல் செட்டை கைப்பற்றினார்.