தரங்கம்பாடி பகுதியில் பனைநுங்கு விற்பனை அமோகம்

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியில் கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வரும் நிலையில் பனைநுங்கு விற்பனை அமோகமாக நடக்கிறது. இது தங்களின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் உதவுவதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். தமிழ் மரம் என அழைக்கப்படும் பனைமரம் தன்னிடம் உள்ள ஒவ்வொன்றையும் மனிதருக்கான மருந்தாகவே அளித்து வருகிறது.

இயற்கை மனிதர்களுக்கு அளித்த கொடைகளில் பனைமரத்திற்கென தனிஇடம் உள்ளது. பனைக்கிழங்கு,நுங்கு,பதநீர், பனைவெல்லம்,பனங்கற்கண்டு, கருப்பட்டி, பனம்பழம் என சலிப்பில்லாமல் மனிதர்களுக்கு பயன்களை தந்து கொண்டே இருக்கிறது. தரங்கம்பாடி, மயிலாடுதுறை, பொறையார். திருக்கடையூர், சங்கரன்பந்தல், கடலி உள்ளிட்ட எல்லா பகுதிகளிலும் சாலையோரங்களில் பனைநுங்கு விற்பனை கடைகள் அதிகளவில் உருவாகி இருப்பது நுங்கு மீதான மக்களின் ஆர்வத்தை காட்டுகிறது. உடல் சூட்டை முற்றிலும் தணிக்கும்.

நுங்கின் மேற்புறம் உள்ள ஓடு போன்ற மிருதுவான பகுதியோடு சேர்த்து சாப்பிட்டால் இன்னும் நல்லது. வயிற்றுவலி, வயிற்றுப்புண், கண்எரிச்சல், போன்றவை சரியாகும். குழந்தைகளுக்கு உடலில் வருகிற வேர்குருவின் மேல் நுங்கு நீரை பூசினால் குணமாயிடும். இவ்வளவு நல்ல குணங்கள் உள்ள பனைநுங்கு சாலை ஓரங்களில் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இது உடல் ஆராக்கியத்திற்கு மட்டுமில்லாமல் வியாபாரிகளின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் உதவியாக இருப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Related Stories: