பூங்காவில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி ஒப்பந்ததாரர்கள் 3 பேர் கைது

கோவை: கோவை சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் ராணுவ வீரர்கள் நலச் சங்க குடியிருப்பில் வசிக்கும் பிரசாந்த் ரெட்டி மகன் ஜியானஸ் ரெட்டி (4), பாலசுந்தர் மகள் வியோமா பிரியா (8) ஆகியோர் கடந்த 23ம் தேதி உள் விளையாட்டு பூங்காவில் மின்சாரம் தாக்கி இறந்தனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், எலக்ட்ரீசியன், பூங்கா பராமரிப்பாளர் உள்ளிட்டோரிடம் விசாரித்தனர். இதையடுத்து சிறுவன், சிறுமி பலிக்கு காரணமாக இருந்ததாக பூங்கா பராமரிப்புக்கான ஒப்பந்ததாரர்கள் முருகன், சீனிவாசன், சிவா ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 304 (ஏ) பிரிவின்படி போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தனர்.

The post பூங்காவில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி ஒப்பந்ததாரர்கள் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: