மனைவியின் ஆபாச வீடியோவை இணையத்தில் பதிவிட்ட கணவர்

நெல்லை: மனைவியின் அந்தரங்க வீடியோவை இணையதளத்தில் பதிவிட்ட கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து, தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கோவை கருமத்தான்பட்டியை சேர்ந்த மிக்கேல் மகன் அந்தோணிராஜ் ஜெபின் (45) என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, அந்த பெண் தந்தையுடன் வசித்து வருகிறார்.  இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு அந்தோணிராஜ் ஜெபின், மனைவியுடன் அந்தரங்கமாக இருந்தபோது எடுத்த வீடியோவை ஒரு ஆபாச இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து ஏற்கனவே முக்கூடல் போலீசில் புகார் செய்யப்பட்டு, வழக்குபதிவும் செய்யப்பட்டது. இதனையடுத்து அந்தோணிராஜ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளார். இதற்கிடையே இருவரும் விவாகரத்து கோரிய வழக்கு நெல்லை கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் கோவையில் கணவருடன் உள்ள தனது மகன்களை பார்க்க அந்த பெண் சென்றுள்ளார். அப்போது அவரை அந்தோணிராஜ் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அவர் ஊர் திரும்புவதற்குள் மீண்டும் அந்தரங்க வீடியோக்களை வேறு ஒரு இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் முக்கூடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி அந்தோணிராஜ் ஜெபின், அவரது நண்பர்கள் உட்பட 5 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து தேடி வருகின்றனர்.

The post மனைவியின் ஆபாச வீடியோவை இணையத்தில் பதிவிட்ட கணவர் appeared first on Dinakaran.

Related Stories: