மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய கொடுமை சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்: பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதம்:  சென்னை, தி.நகரில் நதியா உள்ளிட்ட கும்பல், பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியுள்ளது. இவ்வழக்கை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றி தீவிரமாக விசாரிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

இக் கொடுமைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள லாட்ஜ், பங்களா, வீடு, விடுதி ஆகியவற்றை சீல் வைப்பதோடு அதன் உரிமையாளர்களையும் கைது செய்ய வேண்டும். போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நதியாவை காவல்துறையினர் தொடர்ச்சியாக கண்காணிக்காதது குறித்தும் உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

The post மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய கொடுமை சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்: பாலகிருஷ்ணன் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: